Category Archives: பொடி வகைகள்

கூட்டு பொடி

இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி நாங்க் வீட்டுல “பொரித்த கூட்டு ” செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி. தேவயானவை: உளுந்து 1 கப் மிளகாய் வற்றல் 20 – 25 ஒரு துளி எண்ணை செய்முறை: துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும். மிக்சி இல் …

Read more »

பிசிபேளா பாத் பவுடர்

பல வருடங்களாக எங்க வீட்டில் உபயோகப்படுத்தும் பொடி. இங்கு சொன்ன அளவுக்கு 2 ஹர்லிக்க்ஸ் பாட்டில் அளவு வரும். வருஷத்துக்கு வைத்துக்கொள்ளலாம். எங்க கிருஷ்ணா இந்த பொடியை உருளைகிழங்கு காய் செய்யவும் உபயோகப்படுத்துவான். ரொம்ப நல்லா இருக்கும். தேவையானவை : 250 Gms. தனியா 500 Gms. கடலை பருப்பு 250 Gms. குண்டு மிளகாய் 100 Gms. கச காசா 25 Gms. மராட்டி மொக்கு 25 Gms. அன்னாசிப்பூ 25 Gms. பட்டை 25 …

Read more »

கரம் மசாலா பவுடர்

தேவயானவை: தனியா 50 கிராம் மிளகு 20 கிராம் பட்டை 20 கிராம் சீரகம் 15 கிராம் பெரிய ஏலக்காய் 15 கிராம் கிராம்பு 10கிராம் சிறிய ஏலக்காய் 10 கிராம் பிரிஞ்சி இலை 10 கிராம் செய்முறை : எல்லாவற்றயும் லேசாக வறுத்து பொடிக்கவும். Microwave வில் சுட வைத்தாலும் போரும். காற்று புகாமல் முடி வைத்து உபயோகப்படுத்தவும்.

தோசை மிளகாய் பொடி எள்ளுடன்

தேவையானவை: 1cup கடலை பருப்பு 1cup உளுத்தம் பருப்பு 25 – 35 குண்டு மிளகாய் பெருங்காயம் ஒரு சின்ன துண்டு 1 /4cup கருப்பு எள் உப்பு. துளி எண்ணெய் செய்முறை: கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும். வறட்டு வாணலில் ‘பட பட’ வென பொரியும் வரை வறுக்கவும் தனியே வைக்கவும். வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் . தனியே வைக்கவும். மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும். தனியே வைக்கவும். …

Read more »

தோசை மிளகாய் பொடி (plain)

தேவையானவை: 1cup கடலை பருப்பு 1cup உளுத்தம் பருப்பு 25 – 35 குண்டு மிளகாய் பெருங்காயம் ஒரு சின்ன துண்டு உப்பு. துளி எண்ணெய் செய்முறை: வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் . தனியே வைக்கவும். மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும். தனியே வைக்கவும். இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும். ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும். …

Read more »

” ரச பொடி”

தேவையானவை: 10 – 15 குண்டு மிளகாய் 800gm தனியா 200gm மிளகு 200gm துவரம் பருப்பு 2 – 3 தேக்கரண்டி சீரகம் செய்முறை: மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு ‘கர கரப்’ பாக அரக்கவும். ‘ரச பொடி ‘ ரெடி. குறிப்பு: மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன். உங்களுக்கு விருப்பமானால் மேல் கூறிய சாமான்களுடன் பத்து பல் …

Read more »

வெந்தய பொடி

இது நாம் செய்யும் எல்லா குழம்புகளுக்கும் வேண்டும். என்னதான் குழம்பு பொடி செய்யும் போது வெந்தயம் போட்டு அரைத்தாலும் , மேலுக்கு இதையும் போடணும் அப்ப தான் குழம்பு மணக்கும். தினமும் குழம்பு செய்யும் முன் வறுத்து பொடித்து போடணும். முடியாதவர்கள் 1 வாரம் 10 நாளுக்கு சேர்த்து வறுத்து அரைத்து வைத்து கொள்ளலாம் . எல்லா ஊருகாய் களுக்கும் இது தேவைப்படும். தக்காளி சாதம், கத்தரிக்காய் சாதம், புளியோதரை போன்ற கலந்த சாதங்களுக்கும் பயன்படும். 100 …

Read more »

ராஜஸ்தானி மசாலா பொடி

தேவையானவை: வறுத்து அரைத்த சீரக பொடி 2 டேபிள் ஸ்பூன் ஆம்சுர்  2 டீ ஸ்பூன் மிளகாய் பொடி 2 ஸ்பூன் மிளகு பொடி 1 ஸ்பூன் கருப்பு உப்பு 1/2 ஸ்பூன் கரம் மசாலா 1/2 ஸ்பூன் கொஞ்சம் உப்பு எல்லாத்தையும்  நன்கு கலக்கவும் கறியமுது  செய்யும் போது தூவவும்.

கறிப்பொடி

பலசுவைகளில், பல முறைகளில் இதை தயாரிக்கலாம் நாம் சிலது பார்க்கலாம் தேவையானவை: குண்டு மிளகாய் வற்றல் 10 -12 தனியா 2 -3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் கச கசா – 2 டீ ஸ்பூன் மிளகு 1 ஸ்பூன் தேங்காய் – துருவியது 1/2 கப் ( வரட்டு வாணலி இல் சிவக்க வருக்க்வும்) செய்முறை: எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக போட்டு அரைத்து வைக்கவும். குருமா அல்லது கறி செய்யும் போது …

Read more »

டீ மசாலா பவுடர்

தேவையானவை: ஏலக்காய்  10 கிராம் கிராம்பு 10 பட்டை கொஞ்சம் ஜாதிக்காய்   1/2 செய்முறை: எல்லாவற்றையும் பொடிக்கவும். டீ போடும் போது ஒரு சிட்டிகை போடவும மண  மணக்கும் டீ ரெடி